/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.24.88 கோடியில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு
/
ரூ.24.88 கோடியில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு
ரூ.24.88 கோடியில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு
ரூ.24.88 கோடியில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு
ADDED : பிப் 11, 2026 07:19 AM
கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. இதை, கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூர் மாநகராட்சி வார்டு, 25ல், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தில், 21.76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2 புதிய தார்சாலை மற்றும் தார்சாலை மேம்படுத்தும் பணி, வார்டு 26ல், கணேசா நகர் பகுதியில், 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 4 புதிய சாலை அமைக்கும் பணி, திருநகர் மெயின் ரோடு, காமராஜபுரம் பகுதிகளில், 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3 புதிய சாலை அமைக்கும் பணி, காமராஜபுரம் கிழக்கு பகுதியில், 88.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3 புதிய சாலை அமைக்கும் பணி, வார்டு, 27ல், பாரதி நகரில், 27.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2 புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, வார்டு 15ல், டீச்சர் தெரு மெயின் பகுதியில், 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 4 புதிய சாலை அமைக்கும் பணி, அமர்ஜோதி கார்டன் பகுதியில், 49.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சாலை அமைக்கும் பணி, வார்டு 16ல், பெரியார் நகர் பகுதியில், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சாலை அமைக்கும் பணி, வார்டு, 38, 41, 42 கருப்ப
கவுண்டன் புதுாரில், 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, வார்டு 37 காந்தி நகரில், 64.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 5 புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின், வார்டு 36ல் திருமாநிலையூர் அக்ரஹாரம் ரேஷன் கடை கட்டிடம், திருமாநிலையூர் முதல் கிழக்கு பகுதியில், 21.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 5 புதிய சாலை அமைக்கும் பணி என, மொத்தம், 24.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 134 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

