/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் பிரச்னைகளை தீர்க்க புதிய திட்டங்கள்: பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி
/
குடிநீர் பிரச்னைகளை தீர்க்க புதிய திட்டங்கள்: பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி
குடிநீர் பிரச்னைகளை தீர்க்க புதிய திட்டங்கள்: பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி
குடிநீர் பிரச்னைகளை தீர்க்க புதிய திட்டங்கள்: பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி
ADDED : ஏப் 12, 2024 07:03 AM
கரூர் : ''மாநகராட்சியில் புதிய குடிநீர் திட்டங்கள் மூலம், தண்ணீர் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் தெரிவித்தார்.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு காந்திகிராமம் இ.காலனி சாலை, நரிக்கட்டியூர் தொழில்பேட்டை, எஸ்.வெள்ளாளப்பட்டி, மேலாப்பாளையம், வடக்கு பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது, அவர் பேசியதாவது: இந்தியாவில், கொரோனா காலத்தில் இலவசமாக தடுப்பூசி வழங்கியது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.
80 கோடி மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது மாநிலத்திற்கான தேர்தல் அல்ல, மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலாகும். 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராவது உறுதி.கரூர் மாவட்ட வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய எம்.பி.,யை, இம்முறை பொதுமக்கள் தேர்வு செய்ய வேண்டும். கடந்த, 5 ஆண்டுகளில் எம்.பி., ஜோதிமணி எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசை குறை சொல்லி மட்டுமே ஓட்டு கேட்டு வருகிறார். இந்த பகுதியில் குடிநீர் பிரச்னை நீண்ட நாளாக தீர்க்கப்படாமல் உள்ளது. மத்திய அரசின் நிதியை பெற்று புதிய குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.கரூர் நகர பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று செந்தில்நாதன் பிரசாரம் மேற்கொண்டார். செல்லும் வழி எங்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து, ஆதரவை தெரிவித்தனர். அப்போது அப்பகுதியில் தரைக்கடையில் காய்கறி வியாபாரம் நடந்தது. இதை கவனித்த வேட்பாளர் செந்தில்நாதன், கடைக்காரர்களிடம் சென்று பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிறிது நேரம் அந்த தரைக்கடையில் அமர்ந்து, காய்கறி வியாபாரம் செய்து பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

