/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் புதிய ரேஷன் கடை திறப்பு
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் புதிய ரேஷன் கடை திறப்பு
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் புதிய ரேஷன் கடை திறப்பு
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் புதிய ரேஷன் கடை திறப்பு
ADDED : ஜூலை 25, 2025 12:58 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில், புதிய ரேஷன் கடை திறப்பு விழா நிகழ்ச்சி மாரியம்மன் கோவில் அருகில் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.,சிவகாமசுந்தரி, டவுன் பஞ்சாயத்து வார்டு எண்-1ல், மாரியம்மன் கோவில் அருகில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். பின்னர், மக்களுக்கு புதிய ரேஷன் கடை மூலம் பொருட்கள் வழங்கப்பட்டது. டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, துணைத் தலைவர் வளர்மதி, கிருஷ்ணராயபுரம் தி.மு.க., நகர செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவுத்துறை சங்க செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* மேட்டு மகாதானபுரம் கடைவீதி அருகில் மகாதானபுரம் பஞ்சாயத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்து புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, மகாதானபுரம் பஞ்சாயத்து தி.மு.க., நிர்வாகிகள் இளவரசன், பிரபு, மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர், அலுவலர்கள், பணியாளர்கள், மக்கள், தி.மு.க., தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.