/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் ஸ்டாப்பில் புதிய இருக்கைகள் போடலாமே
/
பஸ் ஸ்டாப்பில் புதிய இருக்கைகள் போடலாமே
ADDED : பிப் 21, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்-சேலம்
தேசிய நெடுஞ்சாலை அருகே செம்மடை பஸ் ஸ்டாப்பில், எம்.பி., நிதியின்
கீழ், பல ஆண்டுகளுக்கு முன், பயணிகள் வசதிக்காக நிழற்கூடம்
அமைக்கப்பட்டது.
அதில் இருந்த இருக்கைகள் உடைந்த நிலையிலும், சில
இருக்கைகள் திருட்டு போயும் உள்ளது. புதிய இருக்கைகள் போடவில்லை.
இதனால் மண் மங்கலம், வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம், பரமத்தி
வேலுார் பகுதிளுக்கு செல்லும் பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள்
நீண்ட நேரம் நின்றபடியே அவதிப்படுகின்றனர். எனவே செம்மடை பஸ்
ஸ்டாப்பில் உள்ள நிழற்கூடத்தில் இருக்கைகளை புதிதாக அமைக்க வேண்டும்.

