/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை தலைமை அஞ்சலகத்தில் புதிய தொழில் நுட்பம் 2.0 துவக்கம்
/
குளித்தலை தலைமை அஞ்சலகத்தில் புதிய தொழில் நுட்பம் 2.0 துவக்கம்
குளித்தலை தலைமை அஞ்சலகத்தில் புதிய தொழில் நுட்பம் 2.0 துவக்கம்
குளித்தலை தலைமை அஞ்சலகத்தில் புதிய தொழில் நுட்பம் 2.0 துவக்கம்
ADDED : ஜூலை 23, 2025 02:10 AM
குளித்தலை, :குளித்தலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் விரைவான சேவைக்காக, அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜியான, தகவல் தொழில் நுட்பம், ஏ.பி.டி., ஐ.டி.,-2.0 என்ற புதிய திட்ட துவக்க விழா நடந்தது. திருச்சி மத்திய மண்டல தபால் துறை தலைவர் நிர்மலா தேவி, தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி கூறியதாவது:
அஞ்சல் துறை, அடுத்த தலைமுறைக்கான அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி பயன்பாட்டை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இது டிஜிட்டல் முன்னேற்றத்திற்கும், தேசத்தின் கட்டமைப்பிற்கும் மிக முக்கியமான முன்னேற்றமாகும். இந்த மாற்றத்திற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய மண்டலத்தில் உள்ள, 24 தலைமை அஞ்சல் அலுவலகங்களில் முதல் முறையாக, கரூர் கோட்டத்தில் உள்ள குளித்தலை தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அதன் கீழ் உள்ள அனைத்து கிளை மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களிலும், நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த, ஏ.பி.டி., ஐ.டி., 2.0 பயன்பாடு, பொதுமக்கள் தங்களது அஞ்சல் சேவைகளை மேலும் சிறப்பாக பயன்படுத்த உதவும். தமிழகத்தில் இத்திட்டம், நான்கு இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், கோவை, தக்கலை, வெள்ளூர், குளித்தலை ஆகிய, நான்கு இடங்களில் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.