sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : மே 09, 2024 06:24 AM

Google News

ADDED : மே 09, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரண்டு சக்கர வாகனம் மோதி பெண் பலி

கரூர் : கரூர் அருகில், புலியூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, 49. கடந்த, 6ல் அதே பகுதியில் நடந்து சென்ற போது, எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு டூவீலர் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளத்தில் தடுமாறி விழுந்த வாலிபர் இறப்பு

கரூர்: டிராக்டரில் சென்ற வாலிபர், பள்ளத்தில் விழுந்து இறந்தார்.சேலம் மாவட்டம் ஓமலுாரை சேர்ந்தவர், ரமேஷ், 24. இவர், நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு தென்னிலை அருகில் பெருக்காம்பாளையத்தில் கிரஷர் அருகில், சாலையில் டிராக்டரில் சென்று உள்ளார். அப்போது, நிலை தடுமாறி அங்குள்ள, 10 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார். பலத்த காயம் ஏற்பட்ட அவரை, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து, தென்னிலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அருகம்பாளையம் வடிகால் அடைப்பால் சுகாதார சீர்கேடு

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, அருகம்பாளையம் அருகே வடிகால் அடைப்பு காரணமாக சாலையில் கழிவு நீர் கலந்து பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து அருகம்பாளையம் வழியாக அரசு காலனி, வாங்கலுக்கு சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. அருகம்பாளையம் பகுதியை ஒட்டி, சாலையோரம் செல்லும் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவு நீர் சாலையில் கலந்து செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சாலையோரம் கழிவு நீர் கலப்பதை கண்காணித்து, முற்றிலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தான்தோன்றிமலையில் சிறுவர் பூங்கா சேதம்

கரூர்: கரூர், தான்தோன்றிமலை வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் உள்ள சிறுவர் பூங்கா சேதமடைந்துள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, தான்தோன்றிமலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அந்த வளாகத்தில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்தும் வகையில் பூங்கா அமைத்து தரப்பட்டது. அங்குள்ள, உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கோடை விடுமுறை என்பதால், பழுதடைந்த உபகரணங்களை வைத்து சிறுவர்கள் விளையாடும் போது, சிறிய காயம் ஏற்படுகிறது. எனவே, பூங்காவை சீரமைத்து தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி

கரூர்: வேலாயுதம்பாளையத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடந்து சென்றவர் இறந்தார்.கரூர் மாவட்டம், மூலிமங்கலத்தை சேர்ந்தவர் குப்புசாமி, 54. இவர் நேற்று முன்தினம், வேலாயுதம்பாளையம் சாலையில் நடந்து சென்று உள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. அதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார், வழக்கு பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என விசாரணை செய்து வருகின்றனர்.

பாம்பு கடித்து கூலி தொழிலாளி பலி

குளித்தலை: பாம்பு கடித்து கூலி தொழிலாளி இறந்தார்.குளித்தலை அடுத்த, சேப்பளாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு, 33, கூலி தொழிலாளி. கடந்த ஏப்., 30 மதியம் 2:00 மணியளவில் தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, பிரபுவை பாம்பு கடித்துள்ளது. உறவினர்கள் பிரபுவை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.இது குறித்து அவரது மனைவி சித்ரா, 31, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த பிரபுவுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

டூவீலர்கள் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

கரூர்: டூவீலர்கள் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழிந்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன், 48. இவர், நெரூரிலிருந்து அரசு காலனி சாலையில் டூவீலரில் சென்றார். இவரது வாகனம் பஞ்சமாதேவி அருகே காளிபாளையம் பகுதியில் சென்றபோது, அதே சாலையில், மற்றொரு டூவீலரில் வந்தவர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி, வாகனத்துடன் கீழே விழுந்த பிரபாகரனுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.இது குறித்து, வெங்கமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேகத்தடையில் வெள்ளை கோடு தேவைகரூர்: கரூர், ராமகவுண்டனுார் செல்லும் சாலையில் விபத்தை தடுக்கும் வகையில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அதை தெரிந்து கொள்ளும் வகையில், வேகத்தடையில், ஜீப்ரா லைன் என்ற வெள்ளை வண்ண கோடுகள் இல்லை. இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது சரிவர தெரியாமல், விழுந்து காயமடைகின்றனர். வேகத்தடை இருப்பது தெரியும் வகையில், வெள்ளைக் கோடு வரைய வேண்டும்.

'தாழ்வான நிலையில் உள்ள ஒயர்களை உயர்த்தணும்'

கரூர்: கரூர், திண்டுக்கல் சாலை மணவாடி அருகில் மின் ஒயர்கள் தாழ்வான நிலையில் உள்ளது. பலத்த காற்று அடிக்கும் போது, ஒயர் அறுந்து கீழே விழுந்து விடும் வாய்ப்பு உள்ளது. இங்கு, மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும் என்பதால், ஒயர் அறுந்து விழும் போது, மின் கசிவால் விபத்துகள் ஏற்படலாம். கனரக வாகனங்கள் பொருட்கள் எடுத்து செல்லும் போது, அதில் ஏதாவது உரசினால் உயிரிழப்பு அபாயம் உண்டு. எனவே, மின் ஒயர்களை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துர்நாற்றத்தால் பயணிகள் தவிப்பு

கரூர்: கரூர், மினி பஸ் ஸ்டாண்ட் அருகில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சேகரிக்கும் குப்பையை, மினி பஸ் ஸ்டாண்டில் உள்ள, குப்பை தொட்டியில் கொட்டி வருகின்றனர். ஆனால், நகராட்சி சார்பில் நாள்தோறும் குப்பையை அகற்றாததால், தொட்டியில் குப்பை நிரம்பி வழிகிறது. பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள், குப்பை குவியலிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால், பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சீர்கேட்டை ஏற்படுத்தும் குப்பையை அகற்ற வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us