sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செய்திகள் சில வரிகளில்... கரூர்

/

செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்


ADDED : ஜன 04, 2024 11:19 AM

Google News

ADDED : ஜன 04, 2024 11:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பள்ளி

மாணவன் மாயம்

கரூர் மாவட்டம், வெள்ளியணை சமத்துவ புரம் பகுதியை சேர்ந்த, தங்கதுரை மகன் ராமர், 14; இவர், வெள்ளியணையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து

வருகிறார்.

கடந்த, 2 ல் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற ராமர், வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் ராமர் செல்லாததால், தந்தை தங்கதுரை போலீசில் புகார் செய்துள்ளார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

சாலை பராமரிப்பு ஊழியர்கள்

சார்பில் முதல்வருக்கு கடிதம்

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் அன்ஸ்கில்டு சங்க, கரூர் மாவட்ட நிர்வாகிகள், நேற்று கரூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, கோரிக்கை கடிதம் அனுப்பினர். அதில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என,

குறிப்பிட்டிருந்தனர்.

கோரிக்கை கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியில், மாநில செயலாளர் குப்புசாமி, மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் வெங்கடேசுவரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து

தங்கம், வெள்ளி திருட்டு

கரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு கணேஷ் நகரை சேர்ந்தவர் மகாலிங்கம், 62; இவர் கடந்த, 2 ல் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு, வீட்டுக்கு சென்ற போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 19.75 பவுன் தங்க நகைகள், மூன்று கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை.

மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, மகாலிங்கம் அளித்த புகார்படி வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

சட்ட விரோத மதுபாட்டில்

விற்பனை: 5 பேர் கைது

கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் அரவக்குறிச்சி, க.பரமத்தி, மாயனுார் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக, மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக மாயகிருஷ்ணன், 32; கோவிந்தராஜ், 50; மேகலா, 35; முருகன், 50; ராமன், 47; ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 32 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி, வீரியபாளையம், கண்ணமுத்தாம்பட்டி, புனவாசிப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி, சரவணபுரம், குழந்தைப்பட்டி, மகிளிப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர்

பாய்ச்சப்படுகிறது.

தற்போது மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்ட விளை நிலங்களில், உழவு பணிகள் செய்யப்பட்டு புதிய குச்சிகள் நடவு செய்யப்படுகிறது. இந்த பணிகளில் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மரவள்ளிக் கிழங்கு சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது என, விவசாயிகள் கூறினர்.

மகள், பேத்தி மாயம்

போலீசில் தாய் புகார்

கரூர் அருகே மகள், பேத்தியை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அசோக் நகரை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி சந்தியா, 23; இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குழந்தை சுதர்ஷினி, 3; என்பவருடன், பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரில் உள்ள, தாய் மீனா வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த அக்., 12ல் வீட்டில் இருந்து குழந்தை சுதர்ஷினியுடன், வெளியே சென்ற சந்தியா வீடு திரும்பவில்லை. இது குறித்து தாய் மீனா கொடுத்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கல்வித்துறை நிர்வாக அலுவலர்

சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், சி.இ.ஓ., அலுவலகம் முன், மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், மாற்றுப்பணி, நிர்வாக மாறுதல் என்ற பெயரில், கல்வித்துறை அமைச்சு பணியாளர்களை, மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வரும் சி.இ.ஓ.,வை கண்டித்தும், பழிவாங்கும் நோக்கத்தில் வழங்கப்பட்ட, பணி மாறுதல்களை ரத்து செய்யக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்பாட்டத்தில், மாநில தலைவர் பொன் ஜெயராம், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் செல்வராணி, மாவட்ட தலைவர் அன்பழகன், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கோபி, ஜெயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இன்றும், நாளையும் கருணாநிதி

நுாற்றாண்டு விழா கருத்தரங்கம்

கரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா கருத்தரங்கம் நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு தலைமை கொறடா செழியன் தலைமையிலான குழுவினர், கரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா கருத்தரங்கை நடத்துகின்றனர். அதன்படி இன்று காலை, 10:00 மணிக்கு கரூர் அரசு கலைக்கல்லுாரியிலும், மதியம், 12:00 மணிக்கு அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியிலும், மாலை, 4:00 மணிக்கு காக்காவாடி ஜெய்ராம் கலை அறிவியல் கல்லுாரியிலும் கருத்தரங்கு நடக்கிறது.

நாளை காலை, 10:00 மணிக்கு ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மதியம், 12:00 மணிக்கு மாயனுார் மாதிரி மேல்நிலைப்பள்ளி, மாலை, 3:00 மணிக்கு கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கருத்தரங்கு நடக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடக்கப்பள்ளியில்

அறிவியல் திருவிழா

நரிகட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மூன்று நாள் அறிவியல் திருவிழா நேற்று தொடங்கியது.

கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார். அறிவியல் திருவிழாவில், 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். அறிவியல் திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் காமாட்சி, மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் கவுரி, பள்ளி தலைமையாசியர் விஜயலலிதா உள்பட பலர்

பங்கேற்றனர்.

இல்லம் தேடி கல்வி

விழிப்புணர்வு பிரசாரம்

அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே, இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

இதில், இல்லம் தேடி கல்வித்திட்ட விழிப்புணர்வு கலைப் பயணக்குழு கரகாட்டம், பறை இசை, தப்பாட்டம் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அறிவியல், கணிதம் உள்ளிட்ட கடினமான பாடங்களை, எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கலை நிகழ்சியோடு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில், தங்கள் வீடுகளின் அருகில் பள்ளி செல்லா குழந்தைகள் இருந்தால் அவர்களை உடனடியாக பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.

பெண் தொழிலாளி

மாயம்;தந்தை புகார்குளித்தலை அடுத்த, செல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி, 63, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் சரோஜாவுக்கும், 30, பூசாரிப்பட்டியை சேர்ந்த ராமராஜ், 33, என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் கம்பெனிக்கு சரோஜா வேலைக்கு சென்று வந்தார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சரோஜா கோபித்துக் கொண்டு, தன் தாய் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணியளவில் குழந்தைகளை பார்த்து வருவதாக கூறி விட்டு சென்றவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.

தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயணிகள் நிழற்கூடத்தை

சுற்றி குவிந்துள்ள குப்பை

கரூர் அருகே மணவாடியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனால், அப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன், பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது, அதை சுற்றி அதிகளவில் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. மேலும், செடிகளும் அதிகளவில் முளைத்துள்ளது. இதனால், நிழற்கூடத்துக்கு செல்ல பயணிகள் அச்சப்படுகின்றனர். மேலும், நிழற்கூடத்தின் சுவற்றில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் நிழற்கூடத்தின் முன் குவிந்துள்ள செடிகள், குப்பையை அகற்றிவிட்டு, விரிசல் உள்ள, பயணிகள் நிழற்கூட சுவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரமத்தியில் குட்கா விற்ற

இரு கடைகளுக்கு 'சீல்'

பரமத்தி டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், சில தினங்களுக்கு முன் பரமத்தி போலீசார் டீ கடை, பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு கடைகளில், 'குட்கா' பறிமுதல் செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, பரமத்தி எஸ்.ஐ., சரண்யா மற்றும் பரமத்தி போலீசார், குட்கா விற்ற இரண்டு கடைகளுக்கு, நேற்று, 'சீல்' வைத்தனர். குட்கா விற்ற இரு கடைகளும், குறைந்தபட்சம், 21 நாட்களுக்கு கடைதிறக்க அனுமதியில்லை என, உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.

பொது சுகாதார வளாகத்தை

திறந்து விட மக்கள் கோரிக்கை

பொது மக்கள் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகம் சார்பில் குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில் பொது மக்கள் காத்திருப்பு அறை, பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.

இரண்டையும் பல்வேறு பகுதியில் இருந்து வந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர்.காலபோக்கில் காத்திருப்பு அறை, கழிப்பிடம் பயன்படுத்த முடியாத வகையில் பூட்டியுள்ளனர். இந்த அலுவலகத்தில் செயல்படும்

ஆர்.டி.ஓ., பொது பணித்துறை,

இ-சேவை, ஆதார் சேவை மற்றும் கிளை சிறை உள்ளிட்ட அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள், கழிப்பிடம் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். 600 மீட்டர் தொலைவில் பஸ் ஸ்டாண்ட் நகராட்சி கட்டண பொது சுகாதார வளாகத்திற்கு செல்ல வேண்டிய நிலை

உள்ளது.

எனவே காத்திருப்பு அறை, கழிப்பிடத்தை திறந்து விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காளியம்மன் கோவிலில் தீமிதி விழா

குண்டத்து ஓம்காளியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியில் உள்ள குண்டத்து ஓம் காளியம்மன் கோவில் திருவிழா கடந்த டிச., 19ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா, நேற்று அதிகாலையில் துவங்கியது. கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குண்டத்தில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர். பலரும் கை குழந்தையுடன் தீ மிதித்தனர். தொடர்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆத்துப்பாளையம் அணையில்

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறக்கும் விழா நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் தங்கவேல், நொய்யல் வாய்க்காலில் வினாடிக்கு, 60 கன அடி தண்ணீரை திறந்து விட்டார். அதன் மூலம், கரூர் மாவட்டத்தில் அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னுார், அத்திப்பாளையம், குப்பம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சை புகளூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, ஆத்துார், புஞ்சை கடம்பங்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிப்பாளையம், மின் னாம்பள்ளி, காதப்பாறை, பஞ்சமாதேவி ஆகிய கிராமங்களில், 19 ஆயிரத்து, 480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும்.

விழாவில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் அப்புசாமி, சதீஷ்வரன், மாவட்ட கவுன்சிலர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us