sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செய்திகள் சில வரிகளில்... கரூர்

/

செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்


ADDED : ஜன 15, 2024 10:33 AM

Google News

ADDED : ஜன 15, 2024 10:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பள்ளியில்

பொங்கல் விழா

கரூர், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன் கலந்து கொண்டார். மாணவ, மாணவியர் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை புடவை கட்டி வந்து கொண்டாடியதோடு, கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் கவுரி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கண்ணன், தங்கமணி, துணைத்தலைவர் பூங்கோதை உள்பட பலர் பங்கேற்றனர்.

'புகையில்லா போகி'

குப்பை சேகரிப்பு

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., வார்டுகளில், 'புகையில்லா போகி' கொண்டாட, குப்பை சேகரிப்பு பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

போகி பண்டிகையை புகையில்லாமல் கொண்டாடும் வகையில், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., வார்டுகளில் வசிக்கும் மக்கள் தேவையில்லாத பொருட்களை தீயிட்டு எரிக்காமல் தடுக்கும் வகையில், துாய்மை பணியாளர்கள், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று குப்பையை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் வார்டுகளில் குப்பை எரிப்பது தடுக்கப்பட்டது.

இப்பணிகளில் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும், பழைய பொருட்கள் சேகரித்து மீண்டும் மக்கள் பயன்படுத்தும் வகையில் சேகரிப்பு மையம் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது.

வாங்கல் அரசு பள்ளியில்

விழிப்புணர்வு பேரணி

கரூர் மாவட்டம், வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் சுற்றுச்சூழல் இயக்கம், தேசிய பசுமைப்படை சார்பில், புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பேரணியை, வாங்கல் போலீஸ் எஸ்.ஐ., செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

இப்பேரணி, வாங்கல் கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மாணவர்கள் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜா, ரவி, ஆசிரியர் சக்திவேல் உள்ளிட்டோர்

பங்கேற்றனர்.

மாயனுார் நெடுஞ்சாலையில்

கால்வாய் சிலாப்புகள் சேதம்

மாயனுார் நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சிலாப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், நடைபாதையில் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் நெடுஞ்சாலை அருகே, மழைநீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயின் மேற்புறம் சிமென்ட் சிலாப்பு அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் ஆனதால், சிலாப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சிலாப்பு வழியாக கடைவீதிகளுக்கு நடந்து செல்லும் பொதுமக்கள், அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

எனவே, மிகவும் மோசமான நிலையில் உள்ள சிலாப்புகளை அகற்றிவிட்டு, புதிய சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருங்கை விதைக்கு

போதிய விலையில்லை

முருங்கை விதைக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாரத்தில், 25,000 ஏக்கரில் முருங்கை சாகுபடி நடக்கிறது. கடந்த அக்., மாதத்தில் முருங்கை சீசன் முடிந்த நிலையில், காய்களை விதைக்காக விவசாயிகள், மரத்தில் விட்டு வைத்திருந்தனர்.

இதனால், முருங்கை விதை உற்பத்தி அதிகரித்தது. இந்நிலையில், கோடைக்காலம் நெருங்கும் நிலையில், புதிதாக முருங்கை சாகுபடியை விவசாயிகள் துவக்காமல் உள்ளனர். இதனால், அரவக்குறிச்சி வட்டாரத்தில், முருங்கை விதைகள் தேக்கமடைந்துள்ளது.

இதுகுறித்து, விதைகளை உற்பத்தி செய்த விவசாயிகள் கூறியதாவது: குளிர்காலமான, கடந்த மார்கழி மாதத்தில் மழை பெய்ததால், கோடை காலமான மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில், மழை பெய்யுமா என, தெரியவில்லை. கடந்த, இரண்டு மாதங்களாக மழை பெய்தும் அரவக்குறிச்சி வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் எதிர்பார்த்த அளவில் உயரவில்லை. இதனால், புதிதாக முருங்கை சாகுபடியை துவக்க தயக்கம் காட்டுகின்றனர். வழக்கமாக, ஒரு கிலோ முருங்கை விதை, 750 ரூபாய் முதல், 1,200 ரூபாய் வரை போகும். தற்போது, 800 ரூபாய் கிடைப்பதே அரிதாக உள்ளது. முருங்கை விதையை இருப்பு வைத்துள்ள,

விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பா.ஜ., சார்பில்

கிரிக்கெட் போட்டி

அரவக்குறிச்சி அருகே, திருமாணிக்கம்பட்டி பகுதியில் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் கிரிக்கெட் போட்டி, நேற்று காலை துவங்கியது. பா.ஜ., மாவட்ட தலைவர்

செந்தில்நாதன், போட்டியை துவக்கி வைத்தார். அரவக்குறிச்சி கிழக்கு மண்டல தலைவர் சங்கர் கணேஷ், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக, 20,000 ரூபாய் ரொக்கம், கோப்பை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., அலுவலகத்தில்

சமத்துவ பொங்கல் விழா

கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா, அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதில், தி.மு.க., மகளிர் அணி சார்பில், பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி, பகுதி செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் கருணாநிதி உள்பட, தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பணம் வைத்து விளையாடிய7 பேருக்கு போலீசார் 'காப்பு'

குளித்தலை அடுத்த வடசேரி பஞ்., பெருமாள் கோவில்பட்டி குளம் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக, தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பணம் வைத்து விளையாடிக்கொண்டிருந்த பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த முத்து, 58, வடசேரி மனோகர், 45, காவல்காரன்பட்டி அண்ணாதுரை, 67, ஆகிய, 3 பேரை கைது செய்தனர்.

இதேபோல், குலக்காரன்பட்டி துர்க்கை அம்மன் கோவில் அருகே, செட்டியபட்டி அருள்மணி, 26, செல்வம், 22, கந்தசாமி, 22, சத்யராஜ், 37, ஆகிய, 4 பேரையும், பாலவிடுதி போலீசார் கைது செய்தனர்.

மதுவிற்ற 9 பேர் கைதுகரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், 9 பேரை கைது செய்தனர்.

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 53 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்ததாக பழனிசாமி, 38, தினேஷ் குமார், 35, ராஜசேகரன், 33, சுரேஷ், 40, பாலு, 38, உள்பட, ஒன்பது பேரை,

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கணவர் மாயம்; மனைவி புகார்குளித்தலை அடுத்த நாச்சகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 45; கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 9 காலை, 7:00 மணிக்கு வேலைக்கு செல்வதாக மனைவி சுமதியிடம் கூறிவிட்டு சென்றார். மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது கணவரை காணவில்லை என, சுமதி தோகைமலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.

துாய்மை பணியாளர்களுக்குத.மா.கா., பொங்கல் பரிசு

அரவக்குறிச்சி டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுக்கு, த.மா.கா., சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடந்தது. இதில், துாய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு பச்சரிசி, வெள்ளம், கரும்பு உள்ளிட்ட தொகுப்புகள் அடங்கிய பொங்கல் பரிசை, த.மா.கா., முன்னாள் எம்.பி., நாட்ராயன் முன்னிலையில், மேற்கு மாவட்ட தலைவர் திருமூர்த்தி தலைமையில் வழங்கப்பட்டது. த.மா.கா., நிர்வாகிகள் சிங்காரம், ஜெகநாதன், ராமசாமி, முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சின்டெக்ஸ் தொட்டியின்கான்கிரீட் மேடை சேதம்

கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி சந்தைப்பேட்டை நெடுஞ்சாலை அருகே, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில், போர்வெல் மூலம் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, சின்டெக்ஸ் தொட்டியின் கான்கிரீட் மேடை முழுவதும் சிதிலமடைந்துள்ளது. இதனால் தண்ணீர் பிடிக்கும்போது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பஞ்., நிர்வாகம், சின்டெக்ஸ் தொட்டியின் கான்கிரீட் மேடையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு கிராமசபை கூட்டத்தில்

பஞ்., வளர்ச்சிக்கு திட்டம் தயாரிப்பு

குளித்தலை அடுத்த தோகைமலை யூனியன் பகுதிகளில் உள்ள, 20 பஞ்.,களுக்கு, 2024 - -25ம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம், அந்ததந்த பஞ்., மன்ற தலைவர்கள் தலைமையில் நடந்து வருகிறது.

'மக்கள் திட்ட இயக்கம்' என்ற திட்டத்தை அனைத்து துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தவும், வளர்ச்சி திட்டம் தயாரித்து கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து, சிறப்பு கிராமசபை கூட்டம் அந்ததந்த பஞ்., தலைவர்கள் தலைமையில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆலத்துார் பஞ்.,ல் தலைவர் ஜெயபால் தலைமையிலும், கூடலுார் பஞ்.,ல் தலைவர் அடைக்கலம் தலைமையிலும் நடந்தது.

கொசு உற்பத்தி அதிகரிப்பு

குழந்தைகள், பெரியோர் அவதி

கரூர் மாநகராட்சி பகுதியில், நாளுக்கு நாள் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால், இரவு நேரத்தில் குழந்தைகள், பெரியோர் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

கரூர் மாநகராட்சியை சுற்றி அமராவதி ஆறு மற்றும் இரட்டை வாய்க்கால் உள்ளது. மேலும், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலும் உள்ளது. வாய்க்கால்களில் தற்போது தண்ணீருக்கு பதிலாக சாக்கடை நீரே தேங்கியுள்ளது. பெரிய அளவிலான கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுக்கடியால், பொது மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். குறிப்பாக பழைய சணப்பிரட்டி பஞ்., இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கொசு கடியால் பரவும் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

பலருக்கு மலேரியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி, கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர வித்யாலயா பள்ளியில்

பெற்றோர்களுக்கு பாத பூஜை

கரூர் அருகே ஆண்டாங்கோவில் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில், பாத பூஜை விழா பள்ளி நிறுவனர் பழனிசாமி தலைமையில் நடந்தது.

அதில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு, தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகம் மற்றும் மந்திரங்கள் ஓதப்பட்டு, பாத பூஜை செய்து வாழ்த்து பெற்றனர்.

நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் அசோக் சங்கர், செயலாளர் ஆனந்த் சங்கர், பள்ளி முதல்வர் காமேஷ்வரராவ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தி.மு.க., சார்பில்

சமத்துவ பொங்கல் விழா

குளித்தலை பெரியபாலம் பகுதியில், நகர தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா, நேற்று மாலை, 6:30 மணிக்கு கொண்டாடப்பட்டது. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சகுந்தலா, அரசு வக்கீல் சாகுல் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம், அரசின் சாதனைகள் குறித்து பேசினார். பின், மக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பெரியபாலம், மலையப்பன் நகர், வையாபுரி நகர் உள்ளிட்ட பகுதியில் கட்சி கொடியேற்றினார். இதேபோல், கலப்பு காலனியில், நகர தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கட்சி கொடியேற்று விழா நடந்தது. நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., மாவட்ட, நகர, மாநில பொறுப்பாளர்கள், பொது மக்கள், தி.மு.க., பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நாளை மாட்டு பொங்கலையொட்டி

அலங்கார பொருட்கள் விற்பனை ஜோர்

மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி, கரூரில் பசுக்களை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனை, நேற்று ஜோராக நடந்தது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல், நேற்று போகியுடன் தொடங்கியது. இன்று வீடுகளில் சூரிய பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தப்படுகிறது.

நாளை விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது, ஆடு, மாடு உள்ளிட்ட, கால்நடைகளை குளிப்பாட்டி, பல்வேறு பொருட்களால் விவசாயிகள் அலங்கரிப்பது வழக்கம்.

அதையொட்டி, பல வண்ணங்களில் மூக்கணாங்கயிறு, தும்பு கயிறு, மணி சங்கு, திருகாணி, சாட்டைகள், கழுத்து மணி, நெத்தி மணி மற்றும் சாட்டைகள் மதுரை மற்றும் சேலம் செவ்வாய் பேட்டை பகுதிகளில் இருந்து, கரூருக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கரூர் ஜவஹர் பஜார் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில், கால்நடை அலங்கார பொருட்கள், 100 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை, நேற்று விற்பனை செய்யப்பட்டது. அதை, விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பொங்கல் தொகுப்பு விடுபடாமல்

அனைவருக்கும் வழங்க அறிவுரை

கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் ரேஷனில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார். இதில், மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 3,31,582 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பான கரும்பு, அரிசி, சர்க்கரை, வேட்டி, சேலை மற்றும் ரொக்க பணம், 1000 ரூபாய் வழங்குவதை விடுபடாமல் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் செயல்படும் புறநோயாளி பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளி பிரிவு, மருந்து பொருட்கள் இருப்பு, கழிப்பறை வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

புகளூர் தாலுகா அலுவலகத்தில் பதிவறை, வழங்கல் பிரிவு, நில அளவை பிரிவு பதிவேடு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்ச்சியில், புகளூர் தாசில்தார் முருகன், வேலாயுதம்பாளையம் தலைமை டாக்டர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

மகள் மாயம்

தந்தை புகார்

குளித்தலை அடுத்த புத்துார் பஞ்., உப்புகாட்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ், 53; விவசாய தொழிலாளி. இவரது மகள் வர்ஷினி, 22. திருச்சி பாரதிதாசன் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த, 12 காலை, 8:10 மணிக்கு வீட்டிலிருந்து கல்லுாரி செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. நண்பர்கள், உறவினர் வீடுகளில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி, பவுன்ராஜ் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வர்ஷினியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us