/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., 'மாஜி' மந்திரி பாப்பா சுந்தரம் மரணம்
/
அ.தி.மு.க., 'மாஜி' மந்திரி பாப்பா சுந்தரம் மரணம்
ADDED : ஏப் 19, 2021 01:19 AM

குளித்தலை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம், நேற்று காலமானார்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த இரணியமங்கலம், வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், பாப்பா சுந்தரம், 86; எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கியதில் இருந்தே, தீவிரமாக பணிபுரிந்து வந்தார்.
அப்போது, குளித்தலை ஒன்றிய செயலராக இருந்தார்.எம்.ஜி.ஆர்., மறைவுக்குபின், ஜெயலலிதா அணியில், 1989ல் சேவல் சின்னத்தில், குளித்தலைதொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1991, 2001, 2011 என, நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார்.ஜெ., ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். மாவட்டச் செயலர், மாவட்ட அவைத் தலைவர் பதவியிலும் இருந்தார். கடைசியாக, மாநில அமைப்பு செயலராக இருந்தார். வயது முதிர்வால், ஒரு வாரமாக, திருச்சிதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை, 5:00 மணியளவில் உயிர்இழந்தார்.இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.