தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ப்ளஸ் 2 தேர்வு துவக்கம் காப்பியடித்தால் அங்கீகாரம் ரத்து

ப்ளஸ் 2 தேர்வு துவக்கம் காப்பியடித்தால் அங்கீகாரம் ரத்து

ப்ளஸ் 2 தேர்வு துவக்கம் காப்பியடித்தால் அங்கீகாரம் ரத்து


ADDED : மார் 01, 2013 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2013 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வுகள் இன்று துவங்கி, வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு பள்ளிக்கல்விதுறை சார்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், 5,009 பேரும், மாணவிகள் 5,389 பேரும், தனித்தேர்வர்கள், 331 பேரும் என, மொத்தம், பத்தாயிரத்து, 67 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். இதில் 83 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், 26 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வுவை கண்காணிக்க, 26 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 26 துறை அலுவலர்கள், 780 அறை காப்பாளர்கள் என, மொத்தம், 832க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். கலெக்டர் தலைமையில், 66 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையங்களிலும் நிலையான பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தமூர்த்தி கூறியதாவது:

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறைகள் காற்றோட்டம், வெளிச்சம் இருக்குமாறும், குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத நேரத்தில், மாணவர்கள் தேர்வு எழுதுவது எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில், கடந்தாண்டைப் போல ஜெனரேட்டர் வசதி செய்யப்படும். அந்தந்த தேர்வு மையங்கள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், ஐந்து மையங்களில் போலீஸார் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வினாத்தாள்கள், தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

காப்பியடிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டால், மாணவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். மேலும், ஐந்து ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாது. தேர்வு மையங்களில் முறைகேடு நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அங்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

தேர்வு மையங்களில் பணிபுரியும் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்களுக்கு கடந்த, 25ம் தேதி நடந்த கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us