தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/திருச்சி சாலையில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் அபாயம்

திருச்சி சாலையில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் அபாயம்

திருச்சி சாலையில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் அபாயம்


ADDED : டிச 11, 2025 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2025 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர்-திருச்சி சாலையில், பல மாதங்களாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் செயல்படாமல் உள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கரூர்-திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதியில், பல மாதங்க-ளுக்கு முன், போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்-டது. தற்போது, சிக்னல் விளக்குகள் சேதமடைந்துள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டம், மோகனுார் மற்றும் வாங்கல், தொழிற்பேட்டை, பசுபதிபாளையம், கொளந்தானுார் பகுதியில் இருந்து வாகனங்கள், திருச்-சிக்கு தெரசா கார்னர் வழியாக செல்ல

வேண்டும்.

மேலும் கரூர் நகரில் இருந்து திருச்சி, புலியூர், உப்பிடமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், தெரசா கார்னர் வழியாக செல்ல வேண்டும். மேலும், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செல்லும் வாகனங்களும் தெரசா கார்னர் வழியாக செல்ல வேண்டும். இந்நிலையில், தெரசா கார்னரில் சேதமடைந்துள்ள போக்குவரத்து சிக்னல் விளக்-குகளால், அந்த பகுதி

யில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துகள்

ஏற்படுகிறது.

தெரசா கார்னர் பகுதியில், பள்ளி உள்ளதால், மாணவியர் சாலையை எளிதாக கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர்-

திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதியில், சேதமடைந்துள்ள போக்-குவரத்து சிக்னல் விளக்குகளை உடனடியாக

சரி செய்ய வேண்டியது

அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us