ADDED : அக் 05, 2026 05:28 AM
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, வடமாநில தொழிலாளி கொலை வழக்கில், சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
பீஹார்
மாநிலத்தை சேர்ந்தவர் சர்புதீன், 60; இவர், கரூர் வேலாயுதம்பாளையம்
நாணப்பரப்பு பகுதியில் தங்கி, தேங்காய் குடோனில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த செப்., 17 இரவு, தேங்காய் குடோனில், பீஹார்
மாநிலத்தை சேர்ந்த மற்ற தொழிலாளிகள் சிராஜீவ், 26, ஜலாவுதீன், 35,
அப்தாபாஹீம், 20, சுபாஷ், 40, மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோர்
இடையே மது அருந்தி கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது.
அப்போது
சர்புதீன், அவர்களை விலக்கி விட முயற்சி செய்தார். ஆத்திரமடைந்த
ஐந்து பேரும், சர்புதீனை கட்டையால் அடித்துவிட்டு தப்பி ஓடி
விட்டனர். அதில், தலையில் படுகாயமடைந்து, திருச்சி அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சர்புதீன், கடந்த செப்., 18ல்
உயிரிழந்தார். இதையடுத்து, வேலாயுதம்பாளையம் போலீசார், கொலை
வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஐந்து பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில்,
பீஹார் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த, 17 வயதுடைய சிறுவனை
வேலாயுதம்பாளையம் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து, மற்ற
நான்கு பேரை தேடி வருகின்றனர்.
