/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்னிலை அருகே விபத்துவட மாநில வாலிபர் பலி
/
தென்னிலை அருகே விபத்துவட மாநில வாலிபர் பலி
ADDED : ஏப் 23, 2025 02:06 AM
கரூர்,:தென்னிலை அருகே நடந்த சாலை விபத்தில், வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.சட்டீஸ்கர் மாநிலம், கர்பா பகுதியை சேர்ந்த சுந்தர்சிங் மர்பாச்சி என்பவரது மகன் ஹரீஸ்வர் சிங், 21; இவர், கரூர் அருகே வைரமடையில் தங்கி, கல் குவாரி
யில் வேலை செய்து வந்தார். கடந்த, 21ல், ஹரீஸ்வர் சிங் பஜாஜ் டூவீலரில் நண்பர் அர்பான் போபூ, 24, என்பவருடன் தென்னிலை அருகே, மடைக்காட்டுபுதுார் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மயிலாடுதுறை சீர்காழியை சேர்ந்த சுபதாசன், 35; என்பவர் ஓட்டி சென்ற பொலீரோ வேன், பஜாஜ் டூவீலர் மீது மோதியது. அதில், கீழே விழுந்த ஹரீஸ்வர் சிங் உயிரிழந்தார். அர்பான் போபூவுக்கு காயம் ஏற்பட்டது. தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

