/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வழிகாட்டி போர்டுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்
/
வழிகாட்டி போர்டுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்
ADDED : மார் 22, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க.பரமத்தி : க.பரமத்தியில் இருந்து, ராஜபுரம் செல்லும் வழியில், பூலாங்காளி வலசு பகுதியில், பஸ் ஸ்டாப் உள்ளது.
அங்கிருந்து பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு செல்ல, வாகன ஓட்டிகளுக்கு வசதியாக ஊர்ப்பெயர்கள் அடங்கிய வழிகாட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், வேகத்தடை உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்கள் அடங்கிய, துண்டு பிரசுரங்களை சிலர் ஒட்டியுள்ளனர். இதனால், கிராமப்பகுதிகளுக்கு செல்லும் வழியை அறிந்து கொள்ள முடியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இதனால், புதிய ஊர்ப்பெயர்கள் கொண்ட பலகையை வைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

