/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொடங்கியது நாவல் பழம் சீசன்; மரங்களுக்கு வலை கட்டும் பணி
/
தொடங்கியது நாவல் பழம் சீசன்; மரங்களுக்கு வலை கட்டும் பணி
தொடங்கியது நாவல் பழம் சீசன்; மரங்களுக்கு வலை கட்டும் பணி
தொடங்கியது நாவல் பழம் சீசன்; மரங்களுக்கு வலை கட்டும் பணி
ADDED : ஜூன் 18, 2024 07:23 AM
கரூர் : கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நாவல் பழம் சீசனுக்காக, மரங்களில் பிளாஸ்டிக் வலை கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் ஜூன் முதல், ஆகஸ்ட் வரை, நாவல் பழம் சீசன் காலமாகும். கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றின் கரையோர பகுதிகளில், புகழூர், நன்னியூர், வாங்கல், நெரூர், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை வரை நுாற்றுக்கணக்கான நாவல் பழ மரங்கள் உள்ளது.நாவல் பழத்தை பொறுத்தவரை, மரத்திலேயே பழுத்துதான் கீழே விழும். இதனால், கீழே விழும் நாவல் பழத்தை, சேகரிக்கும் வகையில் மரத்துக்கு கீழே பிளாஸ்டிக் வலை கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் உகந்தது. சீசன் தொடங்கிய நிலையில், கரூர் நகரில் ஒரு கிலோ நாவல் பழம், 200 முதல், 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.