ADDED : ஆக 21, 2026 05:51 AM

கரூர்:கரூர் அருகே அமைந்துள்ள, நொய்யல் தடுப்பணை தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் பெய்யும் மழையால் உருவாகும் நொய்யல் ஆறு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஓடி, நொய்யல் என்ற பகுதியில் காவிரியாற்றில் கலக்கிறது. தற்போது, வெள்ளியங்கிரி மலையில் எதிர்பார்த்த மழை இல்லை. இதனால், நொய்யல் ஆறு மற்றும் தடுப்பணையில் தண்ணீர் குறைந்தளவே செல்கிறது.
இதனால், கரூர் அருகே நொய்யலில் உள்ள நொய்யல் ஆற்று தடுப்பணையில் சிறிய அளவில் தண்ணீர் ஓடுகிறது. இதனால், தடுப்பணை பகுதியில் கற்கள் வெளியே தெரிகிறது. மேலும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்தும், ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் எதிர்பார்த்த அளவில் வராததால், கரூர் மாவட்ட விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
