தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் போராட்டம்


ADDED : டிச 24, 2025 09:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2025 09:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், செவிலியர்கள் நேற்று ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி, 356ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும், உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கை கைவிட வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், 11 மாத ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கடந்த, 18 முதல் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக, கரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் சங்க உறுப்பினர் விஜயலட்சுமி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us