/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சத்துணவு ஊழியர்சங்கம் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர்சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 23, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். அதில், சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அக விலைப்படியுடன் மாதாந்திர ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் கமலக்கன்னி, செயற்குழு உறுப்பினர் தங்கதுரை, மாவட்ட பொருளாளர் செல்லம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.
********************