ADDED : டிச 12, 2024 01:49 AM
அ நிறம் | அளவு
கரூர், டிச. 12-
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்க வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்துடன், சத்துணவு திட்டத்தை இணைக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு
கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர்கள் கமலகன்னி, விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் முத்து லட்சுமி, செயலாளர் சுந்தரம், செயற்குழு உறுப்பினர் தங்கதுரை உள்பட, பலர் பங்கேற்றனர்.
