கரூர் மாவட்ட பா.ஜ., அமைப்பு தேர்தலுக்கு பார்வையாளர் நியமனம்
கரூர் மாவட்ட பா.ஜ., அமைப்பு தேர்தலுக்கு பார்வையாளர் நியமனம்
ADDED : டிச 19, 2024 01:05 AM
அ நிறம் | அளவு
கரூர், டிச. 19-
கரூர் மாவட்ட, பா.ஜ., அமைப்பு தேர்தலுக்கு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும், பா.ஜ., அமைப்பு தேர்தல் தொடங்கியுள்ளது. வரும் பிப்., மாத இறுதியில், அகில இந்திய பா.ஜ., தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். தமிழகத்தில் மண்டல் நிர்வாகிகளுக்கான, தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்காக, 39 எம்.பி., தொகுதி வாரியாக பார்வையாளர்களை நியமித்து, தமிழக பா.ஜ., நேற்று உத்தரவிட்டது. அதில் கரூர் மாவட்டத்தில், மண்டல் நிர்வாகி தேர்தலுக்காக, மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில், கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, அமைப்பு தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
