/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பு
/
மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பு
மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பு
மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பு
ADDED : மே 13, 2024 07:29 AM
கரூர் : நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு வெளியே ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
அங்கு, வாகனங்களின் மறைவில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது, பள்ளியில் துவங்கி டவுன் போலீஸ் ஸ்டேஷன் வரை, 20க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் மற்றும் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன.
இதனால், போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையில் இருபுறமும் சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தவும், கடைகள் அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது. ஆனாலும், கடைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, சாலை ஓரங்களில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.