ADDED : ஜன 20, 2026 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட ஆக்டோ-ஜியோ மையம் சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு போராடி வரும், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்,
பகுதி நேர ஆசிரியர் கண்ணன் உயிரி-ழப்புக்கு காரணமான, தமிழக அரசு நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் வெங்கடேஷ்வரன், நிர்வாகிகள் கலா, மணிமேகலை, சங்கப்பிள்ளை உள்பட, பலர் பங்கேற்றனர்.

