/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆலை கழிவுநீர் வாய்க்காலில் செல்வதால் துர்நாற்றம்
/
ஆலை கழிவுநீர் வாய்க்காலில் செல்வதால் துர்நாற்றம்
ADDED : பிப் 23, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்;கரூர் அடுத்த புகளூர், டி.என்.பி.எல்., நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அருகில் உள்ள வாய்க்கால் வழியாக செல்வதால், விவசாயம் பாதிக்கப்படுகிறது.
அருகில் உள்ள விவசாய நிலங்கள், விவசாயக் கிணறுகள் சாயக்கழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், புஞ்சை தோட்டக்குறிச்சி வழியே வாய்க்காலில் செல்கிறது. இதனால், வாய்க்கால் ஓரப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் துர்நாற்றத்தில் சிக்கித் தவிக்கின்றனர். டி.என்.பி.எல்., கழிவு நீர் வாய்க்கால் வழியாக செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.