/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிச.,18 முதல் ஆட்சிமொழி சட்டம் வாரம் கொண்டாட்டம்
/
டிச.,18 முதல் ஆட்சிமொழி சட்டம் வாரம் கொண்டாட்டம்
ADDED : டிச 13, 2024 01:20 AM
கரூர், டிச. 13-
வரும், 18 முதல், ஆட்சிமொழி சட்டம் வாரம் கொண்டாடப்படுகிறது என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வரும், 18 முதல் 27 வரை ஆட்சி மொழி சட்டம் வாரம் கொண்டாடப்பட உள்ளது. அரசு பணியாளர்களுக்கு கணினி தமிழ் கருத்தரங்கம், தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைக்க வலியுறுத்தி, வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டம், கல்லுாரி மாணவர்களுடன் பட்டிமன்றம், தமிழறிஞர்களிடையே ஆட்சிமொழி திட்ட விளக்கக் கூட்டம் ஆகியவை நடக்கவுள்ளது.
இவ்வாறு, கூறியுள்ளார்.