/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் இலக்கை மிஞ்சுமென அதிகாரிகள் எதிர்பார்ப்பு
/
சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் இலக்கை மிஞ்சுமென அதிகாரிகள் எதிர்பார்ப்பு
சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் இலக்கை மிஞ்சுமென அதிகாரிகள் எதிர்பார்ப்பு
சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் இலக்கை மிஞ்சுமென அதிகாரிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 04, 2024 05:05 AM
கரூர்: சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், நடப்பாண்டில் சம்பா சாகுபடி இலக்கை மிஞ்சும் என, அதிகா-ரிகள் நம்பிக்கையில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், ஆண்டுதோறும், 36,700 ஏக்கர் நெல் சாகு-படி நடந்து வந்தது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்தாலும், இங்கு பாசனத்திற்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவு என்பதால், பெரும்பாலும் காவிரி ஆற்றுப்பாசன பகுதி-களில் சம்பா சாகுபடி நடக்கிறது. மேலும், உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காதது காரணமாக, மாற்று பயிர் சாகுபடிக்கு சென்று விட்டனர். இதனால், சம்பா சாகுபடி பரப்பு, மெல்ல, மெல்ல சரிந்து வருகிறது. நடப்பாண்டில் மேட்டூரில் தண்ணீர் திறப்பு, பருவமழை பெய்து வருவதால், இலக்கை மிஞ்சும் அள-விற்கு சம்பா சாகுபடி இருக்கும் என, வேளாண் துறையினர் தெரி-வித்தனர்.
இதுகுறித்து, வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்-டத்தில், காவிரி ஆற்றுநீரை மட்டுமே நம்பி சாகுபடி நடப்பதால், 90 சதவீதம் சம்பா பருவ காலங்களில், நெல் பயிரிடப்படுகிறது. கோடை மழையில், 10 சதவீதம் நெல் சாகுபடி நடக்கும். இந்-தாண்டு ஜூலை, 28 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை, 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. இதனால், மாயனுார் கத-வணைக்கு, 14,717 கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால், சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அணையில் தண்ணீர் திறக்-கப்பட்டு வருகிறது.
இதனால், மாவட்ட விவசாயிகள் நெல் சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணராயபுரம், குளித்-தலை, தோகைமலை, தான்தோன்றிமலை ஆகிய வட்டாரங்களில் உழவு, நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்-றனர். அமராவதி அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், க.பர-மத்தி பகுதியில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இதுவரை, 9,241 ஏக்கர் பரப்பு சம்பா சாகுபடி நடந்துள்ளது. இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில், அரசு நிர்-ணயம்
செய்ததை விட, அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.