/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தர்ப்பூசணி கடைகளில் அதிகாரிகள் சோதனை
/
தர்ப்பூசணி கடைகளில் அதிகாரிகள் சோதனை
ADDED : மார் 29, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் வட்டார பகுதிகளில், தர்ப்பூசணி கடைகளில், உணவு பாது-காப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர்.
கோடை காலத்தையொட்டி, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதி-களில், தர்ப்பூசணி விற்பனை செய்யப்படுகிறது.
அதில், செயற்கை கலர் கலக்கப்படுகிறதா என, நேற்று உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சிவராம பாண்டியன், பாது-காப்பு அலுவலர் மதுரை வீரன் ஆகியோர், கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தான்தோன்றிமலை ஆகிய இடங்களில் உள்ள, தர்ப்பூசணி விற்பனை செய்யப்படும் கடைகளில் சோதனை செய்தனர்.அப்போது, தர்ப்பூசணி பழங்களில் செயற்கை கலர் கலக்கக்கூ-டாது என, வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுத்தனர்.