/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகம்
/
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகம்
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகம்
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகம்
ADDED : செப் 05, 2025 01:31 AM
கரூர், ஓணம் பண்டிகை தொடங்கிய நிலையில், வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கேரளாவில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க, அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, கேரளா மட்டுமின்றி தமிழக பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரள மன்னன் மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கேரளாவின் அறுவடை திருவிழா என்றும் அழைக்கின்றனர். இதன்படி, இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கரூர் வாங்கபாளையத்தில், கேரள சமாஜம் சார்பில் உற்சாகமாக ஓணம் கொண்டாட்டத்தை தொடங்கினர். அவர்கள், தங்கள் வீடுகளின் முன் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை உற்சாகமாக வரவேற்றனர். பலரும் தங்கள் வீட்டின் வரவேற்பு அறையிலும் அழகிய அத்தப்பூ கோலமிட்டு, தென்னை பூ, நெல் படைத்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர்.