/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துாய்மை பணியாளருக்கு ஒரு நாள் இ.ஓ., பதவி
/
துாய்மை பணியாளருக்கு ஒரு நாள் இ.ஓ., பதவி
ADDED : அக் 03, 2024 07:25 AM
மல்லசமுத்திரம்: காந்தி ஜெயந்தியையொட்டி, மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், மூத்த துாய்மை பணியாள-ருக்கு ஒருநாள் செயல் அலுவலர் பதவி வழங்கி கவுரவம் செய்யப்பட்டது.நாடு முழுவதும், மகாத்மா காந்தியின், 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அதன்படி, மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், துாய்மை பணியாளராக பணியாற்றி வரும் மூத்த துாய்மை பணியாளர் ஏழுமலைக்கு, ஒருநாள் டவுன் பஞ்-சாயத்து செயல்அலுவலர் பதவி வழங்கி கவுர-விக்கப்பட்டது. அவர், மூன்று கோப்புகளில் கையொப்பமிட்டார். மேலும், துாய்மை பணியா-ளர்கள் அனைவரும் போதை பொருட்களுக்கு அடிமையாக மாட்டோம் என உறுதிமொழி எடுத்-துக்கொண்டனர். தலைவர் திருமலை, செயல்அ-லுவலர் மூவேந்திரபாண்டியன், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

