/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாரண, சாரணியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
/
சாரண, சாரணியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
ADDED : ஆக 03, 2025 12:59 AM
கிருஷ்ணராயபுரம், மாயனுார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில், குளித்தலை சாரண மாவட்டம் சார்பில், ஒரு நாள் சாரண, சாரணியர் தொடக்கநிலைப்பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க நிலை மற்றும் மாவட்ட ஆணையர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் சாரண இயக்கத்தின் வரலாறு, குறிக்கோள், உறுதிமொழி, சட்டம், படைப்பதிவு செய்தல், அமைப்பு முறை, படை செயல்படுத்துதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சென்னை ஷர்மிளா பயிற்சி வழங்கினார்.
மாயனுார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாயனுார் மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா, முதுநிலை விரிவுரையாளர் சரவணன், மாவட்ட குருளையர் ஆணையர் தண்டாயுதபாணி, மாவட்ட சாரண ஆணையர் புருசோத்தமன் உள்பட 71 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.