/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீடித்த நிலையான வேளாண்குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
/
நீடித்த நிலையான வேளாண்குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
நீடித்த நிலையான வேளாண்குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
நீடித்த நிலையான வேளாண்குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
ADDED : ஏப் 18, 2025 02:28 AM
கரூர்:கரூரில், மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், நீடித்த நிலையான வேளாண் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.
கரூர் ஆர்.டி.ஓ.,முகமது பைசல் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், செயற்கை உரம். பூச்சிக்கொல்லி ஆகியவற்றை கட்டுப்படுத்தி வேளாண் காடுகள் மூலம் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்த விளக்கம் அளித்தார்.
கரூர் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கோபி, பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், கரூர் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் பாலசுப்ரமணியன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசினர். நிகழ்ச்சியில், வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்) ராமசாமி, வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) லீலாவதி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்) உமா, வேளாண்மை உதவி இயக்குனர் (தரம் மற்றும் கட்டுப்பாடு) பார்த்திபன், தாந்தோன்றி வட்டார வேளாண் உதவி இயக்குனர் காதர் மொய்தீன் உள்பட பலர் பங்கேற்றனர்.