/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி
/
மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி
ADDED : அக் 26, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தென்னிலை அருகே, மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், தென்னிலை அகிலாண்டபு-ரத்தை சேர்ந்தவர் சந்திரன், 54; இவர் நேற்று முன்-தினம் மாலை, டி.வி.எஸ்., மொபட்டில் தென்-னிலை அருகே, வைரமடை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆனந்தன் என்பவர் ஓட்டி சென்ற அரசு பஸ், சந்திரன் மீது மோதியது. அதில், கீழே விழுந்து தலையில் அடிபட்ட சந்-திரன், அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, சந்திரனின் மனைவி குப்பத்தாள், 50, கொடுத்த புகார்படி, தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.