/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி
/
டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி
ADDED : ஜன 15, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், :
கரூர் அருகே, டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மலையாளன், 54; இவர் கடந்த, 13ல் மாலை கரூர்-திருச்சி சாலை மூலகாட்ட னுார் பகுதியில் டி.வி.எஸ்., மொபட்டில் சென்று
கொண்டிருந்தார்.
அப்போது, பசுபதிபாளையத்தை சேர்ந்த மாதேஷ், 20; என்பவர் ஓட்டி சென்ற, யமஹா பைக், டி.வி.எஸ்., மொபட்டுடன் நேருக்கு நேர் மோதியது. அதில், தலையில் படுகாயம் அடைந்த மலையாளன், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மாதேஷ் காயமடைந்தார்.
தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.