/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை
ADDED : ஆக 07, 2024 07:38 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சின்னவெங்காயம் அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, வயலுார், கருப்பத்துார், சிந்தலவாடி ஆகிய கிராமங்களில், கிணற்று நீர் பாசன முறையில் சின்னவெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைச்சல் கண்டுள்ளதால், தொழிலாளர்களை கொண்டு அறுவடை பணிகள் செய்யப்படுகிறது.
மேலும் மழை காலம் என்பதால், சின்ன வெங்காயத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அறுவடை பணிகள் துரிதமாக துவங்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் உலர்த்தப்படுகிறது. சின்ன வெங்காயம் கரூர், திருச்சி ஆகிய மொத்த கொள்முதல் விற்பனை செய்யும் மண்டிகளுக்கு, விவசாயிகள் நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். தற்போது சில்லரை விற்பனையாக சின்ன வெங்காயம் கிலோ, 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.