ADDED : ஏப் 26, 2026 05:27 AM
கரூர், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, பெரிய வெங்காயம் வரத்து இல்லாததால், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெரிய வெங்காயம் கிலோ, 80 ரூபாயை தொட்டது. அதேபோல், சின்ன வெங்காயம் விலையும், கிலோ, 100 ரூபாயை தாண்டியது.
இந்நிலையில், தமிழகத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்ட நாமக்கல், அரியலுார், பெரம்பலுார், திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து, கரூருக்கு வரத்து துவங்கியுள்ளது. இதனால், முதல் தர சின்ன வெங்காயம், 50 ரூபாய்க்கும், ஈரப்பதம் உள்ள வெங்காயம், 30 ரூபாய் முதல், 35 ரூபாய் என, விலை குறைந்துள்ளது.
அதேபோல், பெரிய வெங்காயம் கர்நாடகா மாநிலத்தில் இருந்து, தமிழகத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. கரூருக்கு கொண்டு வரப்படும், ஒரு கிலோ பெரிய வெங்காயம், 25 ரூபாய் முதல், 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
