'இணையவழி மின் வாரிய விண்ணப்ப சேவை இன்றும், நாளையும் இயங்காது'
'இணையவழி மின் வாரிய விண்ணப்ப சேவை இன்றும், நாளையும் இயங்காது'
ADDED : மே 16, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் வட்டத்தில் உள்ள, அலுவலக இணைய வழி மின் கட்டணம் செலுத்தும் மற்றும் புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் இன்றும், நாளையும் இயங்காது என, கரூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் வகையில், கணினி தரவுகளை படிப்படியாக புதிதாக மேம்படுத்தும் பணிகளை செய்து வருகிறது. இதனால், கரூர் வட்டத்தில் உள்ள அலுவலக இணைய வழி மின் கட்டணம் செலுத்தும் மற்றும் புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் இன்று (16ம் தேதி) காலை, 6:00 மணி முதல், நாளை (17ம் தேதி) நள்ளிரவு, 12:00 மணி வரை இயங்காது.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
