/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறந்து கிடக்கும் மின் பெட்டி விபத்து ஏற்படும் அபாயம்
/
திறந்து கிடக்கும் மின் பெட்டி விபத்து ஏற்படும் அபாயம்
திறந்து கிடக்கும் மின் பெட்டி விபத்து ஏற்படும் அபாயம்
திறந்து கிடக்கும் மின் பெட்டி விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஜன 01, 2025 01:27 AM
திறந்து கிடக்கும் மின் பெட்டி விபத்து ஏற்படும் அபாயம்
கரூர் ;
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ரெங்கநாதபுரம் பஞ்., வளையல்காரன்புதுாரில் மயானம் உள்ளது. எதிரில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் மின் பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் கதவுகள் இல்லாமல் திறந்து கிடக்கிறது. மின்பெட்டியில் உள்ள 'பியூஸ் கேரியர்' மற்றும் மின் ஒயர்கள் வெளியில் தெரிகின்றன. இதை எதிர்பாராத விதமாக தொட்டால், மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், உடைந்த பெட்டியை சீரமைத்து மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.