/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் திறந்த நிலையில் குழிகள்: மக்கள் அவதி
/
கரூரில் திறந்த நிலையில் குழிகள்: மக்கள் அவதி
ADDED : ஜூன் 19, 2024 06:40 AM
கரூர் : கரூர் மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை பராமரிப்புக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளன.
மறுபக்கம் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளும் தாமதமாவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சியில், 48 வார்டுகளில் அடிக்கடி குடிநீர் குழாய்கள் சேதம் அடைகின்றன. அதை சரி செய்ய தோண்டப்பட்ட குழிகள், பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு சரிவர மூடப்படுவது இல்லை. மேலும், பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய, தோண்டப்படும் குழிகளையும், பணிகள் முடிந்த பிறகு உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பது இல்லை.இதனால் மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில், விபத்தை ஏற்படுத்தும் வகையில், திறந்த நிலையில் குழிகள் உள்ளது. மேலும், முக்கிய சாலைகளில் புதிதாக சாக்கடை கழிவு நீர் வாய்க்கால் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதற்காக, தோண்டப்பட்ட குழிகளும் திறந்த நிலையில் உள்ளது. இதனால் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திறந்த நிலையில் உள்ள, குழிகளில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, கரூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, குழிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், முக்கிய சாலைகளில் புதிதாக சாக்கடை கழிவு நீர் வாய்க்கால் கட்டும் பணிகளையும் விரைந்து முடிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது அவசியம்.