/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் யூனியனில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
/
கிருஷ்ணராயபுரம் யூனியனில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
கிருஷ்ணராயபுரம் யூனியனில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
கிருஷ்ணராயபுரம் யூனியனில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
ADDED : பிப் 23, 2024 02:41 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட பாலராஜபுரம், வளையகாரன்புதுார், கட்டளை ஆகிய இடங்களில், புதிய அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் அறுவடை செய்துள்ள நெல் மூட்டைகள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயிகள், 40 கிலோ கொண்ட மூட்டை ஒன்று, 923 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கின்றனர். மேலும், நெல் கொள்முதல் மூலம் நெல் மூட்டைகள் எளிதாக விவசாயிகள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் எந்த விதமான சிரமம் இல்லமால் உள்ளது. தற்போது, கட்டளை, ரெங்கநாதபுரம், பாலராஜபுரம், வளையகாரன்புதுார் ஆகிய பகுதியில் உள்ள விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.