ADDED : ஆக 19, 2025 01:17 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில், புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். மாயனுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காசா காலனி 2ல், புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா, திருக்காம்புலியூர் பஞ்சாயத்து எழுதியாம்பட்டி, காட்டூர், ஆகிய இரண்டு இடங்களில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா, சித்தலவாய் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழ முனையனுார், சேங்கல் பஞ்சாயத்து சின்ன சேங்கலில் புதிய பகுதி நேர ரேஷன் கடை, சித்தலவாய் பஞ்சாயத்து சின்னகிணத்துப்பட்டி புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.
மேலும், கீழ முனையனுாரில் சமுதாயக்கூடம் திறப்பு விழா, ரெங்கநாதபுரம் பஞ்சாயத்து ஆர்.புதுக்கோட்டையில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி துவக்க விழா, பாலராஜபுரம் பஞ்சாயத்து வீரராக்கியம் முதல், காலனி வழியாக செல்லும் தார்சாலையை மேம்படுத்தும் பணி துவக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் ரவிராஜா, யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூட்டுறவு சங்க செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.