ADDED : ஆக 23, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, பாதிரிப்பட்டி பஞ்., பள்ளிப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழாவிற்கு, மாவட்ட கூட்டுறவு துணைப்பதிவாளர் அன்புமொழி தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதிகள் கருப்பையா, சசி, கூட்டுறவு சார் பதிவாளர் தாரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேஷன் கடையை எம்.எல்.ஏ.,மாணிக்கம் திறந்து வைத்து, பொது மக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
இதேபோல் பொருந்தலுார் பஞ்., முத்து பாலகிரி, கல்லடை பஞ்., கீழவெளியூர், தோகைமலை பஞ்., கிருஷ்ணம்பட்டி, கழுகூர் பஞ்., மேலகம்பேஸ்வரம் ஆகிய கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டன. கூட்டுறவு சங்க செயலாளர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.