/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் திறப்பு
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 29, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்ட், மனோகரா ரவுண்டானா அருேக, தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ திறந்து வைத்தார்.வெயில் தாக்கம் மிக கடுமையாக உள்ள நிலையில், வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதன்படி, மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார். கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர்கள் அன்பரசு, ராஜ, மாநகர பகுதி செயலாளர் ராஜா, சுப்பிரமணி ஜோதிபாசு, குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

