/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய படைப்புகளை வெளியிட வாய்ப்பு; கலெக்டர் தகவல்
/
புதிய படைப்புகளை வெளியிட வாய்ப்பு; கலெக்டர் தகவல்
ADDED : அக் 02, 2024 02:04 AM
புதிய படைப்புகளை வெளியிட வாய்ப்பு; கலெக்டர் தகவல்
கரூர், அக். 2-
''கரூர் மாவட்டத்தை சேர்ந்த, எழுத்தாளர்களின் புதிய படைப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் பிரேம் மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நுாலக இயக்கம் சார்பில் புத்தகத் திருவிழா, நாளை (3ம் தேதி) தொடங்குகிறது. இதையொட்டி நடந்த முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் தங்கவேல் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நாளை முதல், 13 வரை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது. அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், 250க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை அரங்குகளுடன், அறிவுசார்ந்த பல்வேறு காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்களின், புதிய படைப்புகளை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை உடனடியாக, கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் வழங்கி விபரங்களை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
ஆய்வின் போது கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுஜாதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாவட்ட நுாலக அலுவலர் சிவகுமார் பங்கேற்றனர்.