தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சிப்காட் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்து-வதற்கு எதிர்ப்பு

சிப்காட் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்து-வதற்கு எதிர்ப்பு

சிப்காட் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்து-வதற்கு எதிர்ப்பு


ADDED : ஜூலை 07, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்; சிப்காட் அமைக்க, 1,300 ஏக்கர் நிலம் கையகப்ப-டுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என, கூடலுார் சுற்று வட்டார மக்கள், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்-தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

குளித்தலை வட்டத்திற்குட்பட்ட கூடலுார், புத்துார், கல்லடை, கள்ளை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில், சிப்காட் தொழிற்-சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக, 1,300 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை அரசு கையகப்ப-டுத்த இருப்பதாக தகவல் வருகிறது. சுற்று வட்-டார கிராமங்களில், 1.000க்கும் மேற்பட்ட குடும்-பத்தினர் வசித்து வருகின்றனர். குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய, புத்துார் ஏரி மட்டுமே உள்ளது. இதன்மூலம் பல ஆயிரக்-கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.இந்த பகுதியில் சிப்காட் அமைக்கப்பட்டால், அங்-குள்ள நிறுவனங்களில் புத்துார் ஏரி நீரானது சிப்காட் தொழிற்சாலைக்கே பயன்படுத்தப்படும். இதனால், விவசாய நிலங்களுக்கும், கால்நடைக-ளுக்கும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மிகுந்த சிரமத்-திற்குள்ளாக வேண்டிய சூழல் ஏற்படும். தொழிற்-சாலை கழிவுகள் நிலங்களில் விடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. நிலம் மாசடைந்து விவசாயம் செய்ய இயலாமல் போய்விடும். உட-னடியாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்-கையை கைவிட வேண்டும்.

இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us