/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது: கமிஷனர்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது: கமிஷனர்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது: கமிஷனர்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது: கமிஷனர்
ADDED : மே 25, 2025 01:28 AM
அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளப்பட்டி நகராட்சியில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் சேமிக்கப்படும் குப்பை, லிங்கமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. கிடங்கிற்கு அருகாமையில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் இதன் அருகில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், பெண்கள் கல்லுாரியும் அமைந்துள்ளது.
குப்பை, கழிவுகளை பிரித்தெடுத்து அருகிலேயே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் தவிக்கின்றனர். தற்போது பள்ளப்பட்டி நகராட்சி சார்பில், ரூ.10 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், இதே பகுதியில் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், இது அமைந்தால் மோசமான சூழ்நிலை ஏற்படும் என, இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து, 26வது வார்டு கவுன்சிலர் ஷாகுல் அமீது கூறுகையில்,'' இப்பகுதியில் குப்பைக்காடு இருக்கும் இடத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், மகளிர் கல்லுாரியும் உள்ளது. இங்கு பெரும்பாலான மக்கள் வசித்து வருவதாலும், இப்பகுதிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வருவதாலும், பள்ளப்பட்டி முழுதும் மக்கள் பாதிக்கப்படுவர். ஆசாத் நகரில், போர்வெல் மூலம் கிடைக்கும் குடிநீர், குடிப்பதற்கு உகந்ததல்ல என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சி மூலம் குடிநீர் பரிசோதனை செய்தனர். இந்த சூழலில், மீண்டும் அதே பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது வேதனையாக உள்ளது,'' என்றார்.
இது குறித்து, நகராட்சி ஆணையர் ஆர்த்தி கூறுகையில்,'' நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான், திட்டம் துவங்கப்பட்டுள்ளது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைவதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. குப்பை கிடங்கில் உள்ள அனைத்து குப்பைகளையும் தரம் பிரித்து, சுத்திகரிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது,''
என்றார்.