/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி
/
தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி
ADDED : ஆக 13, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, கரூர் மேற்கு மாவட்ட செயலர் நேற்று, தி.மு.க.,வில் இணைந்தார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்-னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் கரூர் மேற்கு மாவட்ட செயலராக ஆயில் ரமேஷ் இருந்தார். நேற்று, அந்த அமைப்பில் இருந்து விலகி, கரூரில் உள்ள, தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செய-லரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி முன்னி-லையில், தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது, தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்-தனர்.