ADDED : டிச 18, 2025 05:27 AM

கரூர்: கரூர், மணவாடியில் வேளாண்துறை சார்பில் உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது.
இதை கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்த பின், கூறியதா-வது:இக்கருத்தரங்கின் மூலம் உயிர்ம வேளாண்மையில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி முறை, இயற்கை உரம் பயன்படுத்-துதல் மூலம் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்-தையும் பாதுகாப்பதே
ஆகும்.
முதல்வரின், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்-டத்தில், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மையம் அமைக்க குழு ஒன்றுக்கு, 1 லட்சம் ரூபாய் மானியமும், உயிர்ம வேளாண்-மைக்கான மாதிரிப் பண்ணைத்திடல் அமைக்க, 1 விவசாயிக்கு, 10,000 ரூபாய்- மானியமும், 50 சதவீதம் மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகமும், 50 சதவீதம் மானியத்தில் மண்புழு உரப்படுக்கைகளும், 100 சதவீத மானியத்தில் வேப்பங்கன்றுகள் மற்றும் ஆடாதொடா நொச்சி மரக்கன்றுகளும் விவசாயிகளுக்கு
வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர், கூறினார்.
எம்.எல்.ஏ., இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, வேளாண் இணை இயக்குனர் சிங்காரம், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்-றனர்.
