/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிகம் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும்
/
அதிகம் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும்
அதிகம் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும்
அதிகம் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும்
ADDED : பிப் 03, 2024 03:44 AM
அரவக்குறிச்சி: சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதால், கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை விவசாயம் முதன்மையாக உள்ளது. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளை சுற்றிலும் காலியிடங்களில் கருவேல மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
காடு போல் வளர்ந்துள்ள கருவேல மரங்களின் உட்புறம் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் உள்ளது. இது மட்டுமின்றி சுற்றுச்சூழல், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளையும் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.
புதிதாக வீடு கட்டுவோர் மற்றும் விவசாயத்திற்காக, ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக போர்வெல் போடும் போது, 400 அடிக்கும் மேல் துளையிட்டால்தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலைமை உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருக்கும்போது, அரவக்குறிச்சி பேரூராட்சியோ, பள்ளப்பட்டி நகராட்சியோ கண்டுகொள்வது இல்லை.
குடியிருப்பு பகுதியில் மட்டுமின்றி, நங்காஞ்சி ஆற்றையே மறைக்கும் அளவிற்கு கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
இதனை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அகற்றப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

