/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேளாண்மை துறை சார்பில் முனையனூரில் நெல் சாகுபடி
/
வேளாண்மை துறை சார்பில் முனையனூரில் நெல் சாகுபடி
ADDED : ஜன 13, 2024 04:18 AM
கிருஷ்ணராயபுரம்: முனையனுாரில், வேளாண்மைத்துறை சார்பில் நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது.வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
விவசாயிகளுக்கு நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.நெல் அறுவடைக்கு பிறகு விவசாயிகள் கரும்பு, உளுந்து சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதலாக லாபம் ஈட்ட முடியும் என, புழுதேரி வேளாண்மை அறிவியல் நிலைய மைய தலைவர் திரவியம் கூறினார்.நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் கலைச்செல்வி, கிருஷ்ணராயபுரம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அரவிந்தன், பஞ்சாயத்து தலைவர் பழனியப்பன், கரும்பு அலுவலர் செல்வம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் முரளி கிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர் பொன்ராஜ் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.