/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் நெல் சாகுபடி பணி மும்முரம்
/
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் நெல் சாகுபடி பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் நெல் சாகுபடி பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் நெல் சாகுபடி பணி மும்முரம்
ADDED : செப் 09, 2025 01:31 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், வாய்க்கால் பாசன முறையில், நெல் சாகுபடி பணிகள் துவங்கி வயல்களில் உழவு பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து, கட்டளை புதிய வாய்க்கால், தென்கரை வாய்க்கால், மேட்டுவாய்க்கால் செல்கிறது. வாய்க்கால் தண்ணீர் மூலம் விவசாயிகள் நெல் சாகுபடி பணியை துவங்கியுள்ளனர். டிராக்டர் கொண்டு வயல்களில் உழவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
வரும் சில நாட்களில், உழவு பணிகள் முடிந்த நிலங்களில் நாற்றங்காலில் வளர்ந்து வரும் நெற் பயிர்களை பறித்து, நடவு பணிகள் துவங்கும் என விவசாயிகள் கூறினர். பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் செல்வதால், விவசாய பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்