/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி பாசன பகுதியில் நெல் உரமிடும் பணி
/
அமராவதி பாசன பகுதியில் நெல் உரமிடும் பணி
ADDED : டிச 10, 2025 10:09 AM

கரூர்: கரூர் அமராவதி பாசன பகுதியில், நெல் உர-மிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்று பாசன பகுதியில் கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை பகுதிகளில் நெல், சோளம் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அளவை பொருத்து சாகுபடி நடக்கிறது. தென்-மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கை கொடுத்து உதவினால் மட்டுமே நெல் சாகுபடி மேற்கொள்ளலாம். இந்தாண்டு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், அமரா-வதி ஆற்று பகுதியில் நெல் சாகுபடி மேற்-கொண்டு வருகின்றனர்.
கடந்த அக்டோபர் முதல், நெல் நாற்று விடும் பணியை தொடங்கி உள்ளனர். நெல் சாகுபடிக்காக அமராவதி ஆற்றுப்பகுதிகளில் ஆந்திரா பொன்னி, ஐ.ஆர். 20 நெல் ரகம் நடப்பட்டது. அங்கு நெல் பயிர்கள் வளர்ந்த நிலையில், உரமிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் போதிய அளவில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலும், கிணறு, போர்வெல் பாசனத்தை வைத்து சாகுபடி மேற்கொண்டு விடலாம் என்ற நம்பிக்கையில், விவசாய பணி மும்மரமாக நடந்து வருகிறது.

